இந்திய தேசிய கொடியுடன் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னால் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated: Feb 12, 2018, 05:52 PM IST
இந்திய தேசிய கொடியுடன் பாக்கிஸ்தான் கிரிக்கெட்  வீரர்
Pic Courtesy : Twitter

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ்கட்டி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட்டில் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும், ஷேவாக் தலைமையிலான டையமன்ட்ஸ் அணியும் மோதின. இரண்டு போட்டிகளிலும் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் தெரிவித்தனர். எனவே அங்கிருந்த தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

அப்பொழுது, போட்டியை காண சென்ற இந்திய ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளக்க விரும்பினார். அந்த ரசிகையின் கையில் இந்திய தேசிய கொடி மடக்கி பிடித்திருந்தார். அதை பார்த்த ஷாஹித் அப்ரிடி, தேசிய கொடி விரித்து பிடிக்க சொல்லி, அந்த ரசிகையுடன் ஷாஹித் அப்ரிடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்திய தேசிய கொடியுடன் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னால் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Thank u Switzerland 

A post shared by Shahid Afridi (@safridiofficial) on