Viral Video: மயிலை தாக்க முயன்ற புலி.. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

தோகை விரித்திருக்கும் மயிலைப் பார்த்தால், அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இவ்வளவு அழகான மயிலைத் தாக்க யாரும் நினைக்க மாட்டார்கள். இது மனிதர்களுக்கு சரி ஆனால் விலங்குகளுக்கு அல்ல. அப்படிப்பட்ட வீடியோ தான் இங்கு வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 8, 2023, 03:43 PM IST
  • மயிலை புலி தாக்கும் வீடியோ.
  • காட்டு விலங்குகளின் வைரல் வீடியோ.
Viral Video: மயிலை தாக்க முயன்ற புலி.. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் title=

தோகை விரித்திருக்கும் மயிலைப் பார்த்தால், அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இவ்வளவு அழகான மயிலைத் தாக்க யாரும் நினைக்க மாட்டார்கள். இது மனிதர்களுக்கு சரி ஆனால் விலங்குகளுக்கு அப்படியில்லை. அதுவும் நிச்சயமாக, இது ஒரு காட்டு விலங்கு புலிக்கு பொருந்தாது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, புலி எப்போதும் தாக்க முயற்சிக்கும். புலிகள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலங்குகளை புலி தாக்கும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் அழகான மயிலைத் தாக்கும் வீடியோவை நாம் அரிதாகவே பார்ப்போம். தற்போது புலி ஒன்று மயிலை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் இறுதியில் நடப்பதை கண்டால் உங்களால் நம்பவே முடியாது.

மயிலை புலி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காட்டில் சில மயில்கள் இருப்பதை நாம் காணலாம். சிறிது நேரம் கழித்து, அங்கு பெரிய மயில் ஒன்று திடீரென தனது தோகையை விரித்து ஆடுகிறது. இந்த காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் கேமராக்களில் படம் பிடித்துள்ளனர். ஆனால் இங்கே ஒரு எதிர்பாராத திருப்பம் நடக்கிறது. மயிலுக்குப் பக்கத்தில் உள்ள புதர்ல் இருந்து ஒரு பெரிய புலி பதுங்கியிருந்து வெளியே வருகிறது. பின்னர் மயிலை தாக்க தயாராகி வருகிறது.

மேலும் படிக்க | ஆசையாய் காதல் தூது விடும் பெண்! பாலைவனத்தில் நடக்கும் தவளைக் காதல் நாடகம்

இதுவே நல்ல நேரம் என நினைத்து புலி திடீரென புதரை விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த மயில்கள் உஷாராகிவிடுகிறது. "என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, புலி" என்று கூறியது போல் தனது இறக்கைகளை விரித்து காற்றில் எழுகிறது. அதனுடன் சிறிய மயில்களும் பெரிய மயிலைப் பின்தொடர்கின்றன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் 2.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Viral video: வசூல் முடிந்ததும் வேஷத்தை கலைக்கும் பிச்சைக்காரன்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News