மகளிர் தின ஸ்பெஷல்: தமிழ்ப்படம் 2.0 பட குழுவினரின் சர்ப்ரைஸ்!

தமிழ்ப்படம் 2.0 படத்தின் குழுவினர் இன்று ரொமேண்டிக் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளனர். 

Updated: Mar 8, 2018, 10:37 AM IST
மகளிர் தின ஸ்பெஷல்: தமிழ்ப்படம் 2.0 பட குழுவினரின் சர்ப்ரைஸ்!
ZeeNews

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான `தமிழ்ப்படம்’ படத்தின் இரண்டாவது பாகம் தமிழ்ப்படம் 2.0 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படக்குழு ஒரு சர்ப்ரைஸ் தரவுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ரொமேண்டிக் சிங்கிள் பாடலை இன்று காலை 9 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் வெளியிடுகிறார்