சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா

Updated: Oct 11, 2017, 07:49 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா
Pic Courtesy : Twitter

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இடம் பிடித்துள்ளார். ஆனால் முதல் இரண்டு போட்டியிலும் அவர் களம் இறங்கவில்லை. எஞ்சிய ஒரு போட்டியில் அவர் விளையாடுவார என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அப்படி தேர்வு செய்யப்படும் பட்சத்தில் நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் ஆடிய பின் அவர் ஓய்வு பெறுவதைக் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

அவரை பற்றி சில குறிப்பு:-

38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர். 

1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்காக 17 டெஸ்ட் விளையாடி 44 விக்கெட் எடுத்துள்ளார்.

120 ஒருநாள் போட்டியில் விளையாடி 157 விக்கெட் எடுத்துள்ளார்.

26 டி20 போட்டியில் விளையாடி 34 விக்கெட் எடுத்துள்ளார்.

கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய கேப்டன் விராத் கோலி என பல கேப்டன்களிம் கீழ் விளையாடி உள்ளார்.

நவம்பர் 1-ம் தேதிக்கு பின் அவர் ஓய்வு பெற உள்ளார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close