Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Last Updated : Sep 19, 2018, 09:28 AM IST
Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!  title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங்காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதைத்தொடர்ந்து ஹாங்காங் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

Trending News