ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் கைது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் அர்சகான் காவ்ஜா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்! 

Updated: Dec 4, 2018, 01:19 PM IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் கைது
Representational Image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் அர்சகான் காவ்ஜா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்! 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உஸ்மான் காவ்ஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளார். உஸ்மான் காவ்ஜாவின் சகோதரர் 39 வயதுடைய அர்சகான் காவ்ஜா.  பயங்கரவாத குற்றச்சாட்டில் தனது நண்பரை சிக்க சதி செய்ததற்காக அர்சகான் காவ்ஜா கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆகஸ்டில் கண்டுபிடிக்கப்பட்ட போலி பயங்கரவாதத் திட்டத்தில் ஒரு சக ஊழியரை அவர் தொடர்புபடுத்தியதாக குற்றச்சாட்டு மீது அஸ்லானன் காவலில் வைக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் PhD மாணவராக பணியாற்றும் போது முகமது நிசாமுதீன் என்ற மாணவருடைய நோட்டு புத்தகத்தில், தீவிரவாத தாக்குதல் தொடர்பான விவரங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அவர் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். 

ஆனால் கையெழுத்து ஒத்துப் போகாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உஸ்மான் குவாஜாவின் சகோதரர் அர்சலான் குவாஜாவும், நிசாமுதீனும் நண்பர்கள் எனத் தெரிய வந்தது. அந்த நேரத்தில், அவர் போட்டியாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒரு பெண் தொடர்பாக நிசாமுதீன் மீது குவாஜாவுக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக தீவிரவாத தாக்குதல் குறித்த விவரங்களை நிசாமுதீனின் நோட்டு புத்தகத்தில் அவர் எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அர்சனாலா குவாஜா இன்று கைது செய்யப்பட்டார்.

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close