ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்ப்பு

Updated: Aug 9, 2017, 11:06 AM IST
ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்ப்பு
PTI

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டி விளையாடி வருகின்றது.

நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3-வது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை அன்று பல்லகல்லேவில் தொடங்க உள்ளது. 2வது டெஸ்ட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாததால் ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.