இலங்கை எதிரான இந்திய அணி அறிவிப்பு; அஸ்வின் & ஜடேஜா ரீ என்ட்ரி!!

இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இலங்கைக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Updated: Nov 10, 2017, 07:36 PM IST
இலங்கை எதிரான இந்திய அணி அறிவிப்பு; அஸ்வின் & ஜடேஜா ரீ என்ட்ரி!!
Zee Media

இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்தியாவுடன் விளையாட இருக்கிறது. 

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நவ.,16-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு இலங்கை அணி, நமன் ஓஜா தலைமையிலான XI அணியுடன் பயிற்ச்சி ஆட்டம் ஆட உள்ளது.

இந்திய அணி விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரகானே(துணை கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரோகித் சர்மா, தவான், சகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இசாந்த் ஷர்மா, மொகமது ஷமி, 

இந்தியா - இலங்கை போட்டி அட்டவணை:-

டெஸ்ட் தொடர் 

முதல் போட்டி கொல்கத்தா  நவம்பர் 16-20
இரண்டாவது போட்டி நாக்பூர் நவம்பர் 24-28
மூன்றாவது போட்டி டெல்லி டிசம்பர் 02-06

ஒருநாள் தொடர் அட்டவணை :

முதல் ஒருநாள் போட்டி தர்மசாலா டிசம்பர் 10 
இரண்டாவது போட்டி மொஹாலி டிசம்பர் 13
மூன்றாவது போட்டி விசாகப்பட்டினம் டிசம்பர் 17 

டி20 தொடர் அட்டவணை : 

முதல் டி20 போட்டி கட்டாக் டிசம்பர் 20 
இரண்டாவது டி20 போட்டி இந்தூர் டிசம்பர் 22 
மூன்றாவது டி20 போட்டி  மும்பை டிசம்பர் 24