கோலி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்தியா..!

விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒருமுறைகூட ஐசிசி டைட்டிலை வென்றதில்லை என கூறப்படும் நிலையில், அவரது தலைமையில் ஒருமுறை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 4, 2022, 04:42 PM IST
  • ஐசிசி டைட்டிலை வென்றதில்லையா விராட் கோலி?
  • ஒருமுறை ஐசிசி உலகக்கோப்பையை வென்றுள்ளார்
  • 2008 ஆம் ஆண்டில் U19 உலக்கோப்பை வெற்றி
 கோலி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்தியா..! title=

இந்திய அணியின் ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவிலான தொடர்களுக்கும் கேப்டனாக இருந்த கோலி, அண்மையில் அனைத்து வடிவிலான இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் இருந்தும் விலகினார். 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்த தொடருடன் 20 ஓவர் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான கேப்டன் பதவியில் நீடிப்பேன் என தெரிவித்தார்.

ALSO READ | மைதானத்தில் தாலாட்டு பாடிய கோலி..! வைரல் வீடியோ

ஆனால், அவரின் இந்த முடிவை ஏற்க மறுத்த பிசிசிஐ ஒருநாள் கேப்டன் பதவியை பறித்தது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியில் இருந்தும் விலகினார். ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமான இருக்கும் சர்வதேச வீரர் என்ற பெருமையை அவர் அடைந்திருந்தாலும், அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, கோலி தலைமையிலான இந்திய அணி ஒருமுறைகூட ஐசிசி டைட்டில்களை வென்றதில்லை என்பதுதான். 

ஏனென்றால், அவரது தலைமையில் விளையாடிய 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெறும்கையுடன் தாயகம் திரும்பியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பைனலில் தோல்வியை சந்தித்தது. இதனால், ஐசிசி தொடர்களுக்கும், கோலிக்கும் ராசியே இல்லை என்றும் விமர்சித்தனர். ஆனால், அவர்களுக்கு தெரிய வேண்டியது என்னவென்றால், கோலி தலைமையில் இந்திய அணி ஒருமுறை உலகக்கோப்பையையே வென்றிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக்கோப்பையில், இவரது தலைமையிலான இந்திய அணி வாகை சூட்டி, கோப்பையுடன் இந்தியா திரும்பியது. 

ALSO READ | Virat: கோலியின் சேட்டை..! ப்ளைட்டில் கடுப்பான இஷாந்த்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News