இந்திய அணியை கேலி செய்த இங்கிலாந்து ரசிகர்கள் -வீடியோ இணைப்பு

மைதானத்திற்கு வெளியே இந்திய அணியை கேலி செய்த இங்கிலாந்தின் ரசிகர்கள். காணொளி இணைக்கப்பட்டு உள்ளது.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 6, 2018, 06:21 PM IST
இந்திய அணியை கேலி செய்த இங்கிலாந்து ரசிகர்கள் -வீடியோ இணைப்பு
Pic Courtesy : Youtube

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு எதிராக மேற்கொண்டுள்ள மூன்று விதமானா கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20, ஒருநாள் போட்டியை அடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பிரிமிக்ஹான் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்து. இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் விராத் கோலி 149(225) உதவியோடு 274 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 13 ரன்கள் முன்னிலை பெற்று, தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணி 193 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 162 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-௦ என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. 

இரண்டு இன்னிங்க்ஸிலும் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படாததால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. 

இந்நிலையில், மைதானத்தில் இருந்து வெளிய வந்த இந்திய வீரர்கள் பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த சில இங்கிலாந்து ரசிகர்கள் விராத் கோலி பெயருடன் கோஷங்களை எழுப்பினார்கள். உங்கள் விராட் கோஹ்லி எங்க மறைந்துக் கொண்டார் என கேலி செய்யும் விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் செயல்பட்டனர். 

வீடியோ:-

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close