துப்பாக்கிசுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்!

மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சுடுதல் உலககோப்பை போட்டியில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது!

Updated: Mar 6, 2018, 07:03 PM IST
துப்பாக்கிசுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்!

மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சுடுதல் உலககோப்பை போட்டியில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது!

ISSF - சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் ஆனது மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகின்றது.

இத்தொடரின் கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

476.1 புள்ளிகள் பெற்று இந்த ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. இரண்டாம் இடத்தினை பிடித்த ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் - சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர். பிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது.

அதேவேலையில் இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தனர்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close