இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் - தமிழக வீரர் நம்பிக்கை

Updated: Mar 21, 2017, 09:59 AM IST
இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் - தமிழக வீரர் நம்பிக்கை
Pic courtsey: Pti

இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து தமிழக அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். இதனால் தமிழகம் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

விஜய் ஹசாரே டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அவ்வளவு எளிதாக இல்லை. கேப்டன் விஜய் சங்கர் உட்பட 49 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தோம். அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடுவது எனது வாழ்நாள் கனவு. ஒரு சில தவறால் எனது இடத்தை பறிகொடுத்துவிட்டேன். இருந்தாலும் எனக்கு தன்நம்பிக்கையும், தைரியமும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எப்படியும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என கூறினார்.