ICC U-19 World Cup: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியா அணி 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Last Updated : Jan 14, 2018, 02:35 PM IST
ICC U-19 World Cup: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி! title=

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இன்றைய  தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பிரித்வி ஷா 100 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய கல்ராவும் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா மொத்தம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்தது. 

பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் எட்வட்சும், மேக்ஸ் விளையாடினார். மெக்ஸ் பிரயண்ட் 29 ரன்களிலும், ஜேசன் சங்கா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பாக விளையாடிய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்தார். மெர்லோ 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பரம் உப்பல் 4 ரன்களிலும், ஆஸ்டின் வாக் 6 ரன்களிலும், வில் சுதர்லாண்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜாக் எட்வர்ட்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சேவியர் பார்லெட் 7 ரன்களிலும், ஜேசன் ரால்ட்சன் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பேக்ஸ்டர் ஹோல்ட் நிதானமாக விளையாடி 39 ரன்கள் எடுத்து இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Trending News