INDvsWI: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

மேற்கிந்திய தீவு அணிக்கான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திற்க்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை அறிவித்தது பி.சி.ஐ.ஐ.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Oct 11, 2018, 03:04 PM IST
INDvsWI: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு
Pic Courtesy : @bcci

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட 4-ஆம் நாள் இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவு மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. இதனையடுத்து 2_வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பி.சி.ஐ.ஐ. வெளியிட்டு உள்ளது. வழக்கமாக போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை, ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அறிவிக்கப்படுவார்கள். ஆனால் இந்தமுறை ஒருநாளுக்கு முன்னரே டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தகது.

 

இந்திய வீரர்கள் பட்டியல்:-

விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல் ராகுல், ப்ர்தீவ் ஷா, சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close