முதல் டெஸ்ட்: மேற்கிந்திய அணி 94/6; இந்தியாவை விட 555 ரன்கள் பின்தங்கி உள்ளது

டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார் ரவீந்திர ஜடேஜா!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2018, 04:48 PM IST
முதல் டெஸ்ட்: மேற்கிந்திய அணி 94/6; இந்தியாவை விட 555 ரன்கள் பின்தங்கி உள்ளது title=

இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. நாளை மூன்றாம் நாள், அந்த அணி தொடர்ந்து ஆட உள்ளது. இந்தியாவை விட 555 ரன்கள் பின்தங்கி உள்ளது.

 

கீமோ பால்* 13(15) மற்றும் ரோஸ்டன் சேஸ் 27(38) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். 


16:36 05-10-2018

தற்போதைய நிலவரப்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 28 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. கீமோ பால்* 13(15) மற்றும் ரோஸ்டன் சேஸ் 25(32) ஆடி வருகின்றனர்.

இந்தியாவை விட 557 ரன்கள் பின்தங்கி உள்ளது.

 


16:33 05-10-2018

மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 74 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய தரப்பில் ஷாமி இரண்டு விக்கெட்டும், ஜடேஜா, அஸ்வின் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.


14:46 05-10-2018

649 ரன்களுக்கு இந்தியா டிக்ளர் செய்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி துவங்கியது. துவக்க வீரர் ப்ராத்வொயிட் 2(10) ரன்களின் வெளியேறினார்.

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்தியா 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 0(4), கிரண் பவுள் 0(4) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


14:14 05-10-2018

டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தினை அடித்தார் ஜடேஜா!

தற்போதைய நிலவரப்படி... இந்தியா 149.5 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்துள்ளது. ரவிந்திர ஜடேஜா 100(132) மற்றும் மொஹமது ஷமி 2(6) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

மேற்கிந்திய தீவு வீரர் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளை குவித்து அசத்தி வருகின்றார்.


13:55 05-10-2018

உமேஷ் யாதவ் 22(24) ரன்களில் அவுட் ஆனார்!

தற்போதைய நிலவரப்படி... இந்தியா 145 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 633 ரன்கள் குவித்துள்ளது. ரவிந்திர ஜடேஜா 86(109) மற்றும் மொஹமது ஷமி 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

மேற்கிந்திய தீவு வீரர் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளை குவித்து அசத்தி வருகின்றார்.


13:50 05-10-2018

இந்திய அணி 600 ரன்களை கடந்த நிலையில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது!

தற்போதைய நிலவரப்படி... இந்தியா 143 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 624 ரன்கள் குவித்துள்ளது. ரவிந்திர ஜடேஜா 78(101)மற்றும் உமேஷ் யாதவ் 21(20) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


12:54 05-10-2018

128.1: WICKET! ரவிச்சந்திர அஷ்வின் 7(15) தேவேந்திர பிஷூ வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரவிச்சந்திர அஷ்வின்.

தற்போதைய நிலவரப்படி... இந்தியா 129 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 549 ரன்கள் குவித்துள்ளது. ரவிந்திர ஜடேஜா 34(66) மற்றும் குல்தீப் யாதவ் 2(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

மேற்கிந்திய தீவு வீரர் தேவேந்திர பிஷூ 3 விக்கெட்டுகளை குவித்து அசத்தி வருகின்றார்.


12:43 05-10-2018

123.4: WICKET! விராட் கோலி 139(230) தீவிந்திர பிஷூ வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட் கோலி!

தற்போதைய நிலவரப்படி... இந்தியா 126 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 542 ரன்கள் குவித்துள்ளது. ரவிந்திர ஜடேஜா 30(57) மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் 6(9) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!


11:43 05-10-2018

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 118 ஓவர்கள் விளையாடியுள்ளது. 5 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது!

விராட் கோலி 120(215) மற்றும் ரவிர்திர ஜடேஜா 19(33) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் தீவிந்திர பிஷூ 2 விக்கெட், ஷெர்மென் லிவிஸ், ஷெனென் கேப்ரியல், ராட்சன் சேஷ் தலா 1 விக்கெட்டுகளை குவித்துள்ளனர்.


11:03 05-10-2018

#Wicket - ரிஷாப் பன்ட்_92(84) : தேவேந்திர பிஷூ வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரிஷாப் பன்ட்! 

தற்போதைய நிலவரப்படி இந்தயா 109 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழந்து 473 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 104(190) மற்றும் ரவீந்திர ஜடேஜா 02(04) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


10:59 05-10-2018

அதிரடி ஆட்டத்தை துவங்கியது இந்தியா... டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தினை அடித்தார் ரிஷாப் பன்ட். 

தற்போதைய நிலவரப்படி இந்தயா 108 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 470 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 103(189) மற்றும் ரிஷாப் பன்ட் 92(83) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 


இந்தியா - மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதும் முதலவாதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 400 ரன்கள் குவித்துள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கட் மைதானத்தில் ஆகஸ்ட 4-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 0(4) ரன் ஏதும் இன்றி வெளியேற மற்றொரு தொடக்க வீரரான ப்ரித்திவி ஷா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இப்போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 134(154) ரன்கள் குவித்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் புஜாரா 86(130), ரஹானே 41(92) என அணிக்கு பலம் சேர்த்து வெளியேற, அணித்தலைவர் கோலி மற்றும் அவருக்கு துணையாக ரிஷாப் பன்ட் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஒவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 364 ரன்கள் குவித்தது. கோலி மற்றும் அவருக்கு துணையாக ரிஷாப் பன்ட் களத்தில் இருக்க இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 97 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 88(160), ரிஷாப் பன்ட் 38(46) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!

Trending News