பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா அணி பேட்டிங்

Updated: Sep 12, 2017, 10:07 AM IST
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா அணி பேட்டிங்
PTI

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் - ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. 

முதல் ஒரு நாள் போட்டி வரும் செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரு பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் (50 ஓவர்) சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது. 

இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம். சி,டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அணிகள்:-

ஆஸ்திரேலியா அணிகள்:

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கவுல்டர்-நிலே, மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஜேம்ஸ் பவுல்க்னெர், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, கனே ரிச்சர்ட்சன்.

கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள்: 

குர்கீரத் சிங் மான் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், சிவம் சவுத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்த் போட்டர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, அக்‌ஷய் கார்னிவர், குல்வாந்த் கெஜ்ரோலியா, குஷாங் பட்டேல், அவேஷ்கான், சந்தீப் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா, பயிற்சியாளர்: ஹேமங் பதானி.

இந்த ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.