INDvsSA: நான்காவது ஒருநாள், சில முக்கிய குறிப்புகள்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

Last Updated : Feb 10, 2018, 12:25 AM IST
INDvsSA: நான்காவது ஒருநாள், சில முக்கிய குறிப்புகள்! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முன்னதாக, இத்தொடரில் நடைப்பெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று நடைப்பெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தனது தொடர் வெற்றியை உறுதி செய்கிறது. கடத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் தென்னாப்பிரிக்க இத்தொடரை சமன் செய்ய நடைபெறவுள்ள மூன்று போட்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது.

முன்னதாக நடைப்பெற்ற மூன்று போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிலவியது.

குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் 21 (3 போட்டிகளிலும்) விக்கெட்டுகளை எடுத்தனர்.  

அதே வேலையில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், தென்னாப்பிர்க்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார், எனவே இப்போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி விட்டார் தங்களது வெற்றியை உறுதி செய்து விடலாம் என தென்னாப்பிரிக்கா வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

...இப்போட்டியை பற்றி...

இடம் - நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்

நேரம் - பிப்.,10 _ 01:00 PM (உள்ளூர் நேரம்), 10 04.30 PM (இந்திய நேரம்)

Trending News