ஐபிஎல் 2017: டெல்லி 67 ரன்களில் சுருண்டது

Last Updated : Apr 30, 2017, 05:31 PM IST
ஐபிஎல் 2017: டெல்லி 67 ரன்களில் சுருண்டது title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

மாலை 4 மணிக்கு மொகாலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ச்சியான 4 ஆட்டங்களில் தோற்றது. 

பஞ்சாப் அணி ஏற்கனவே டெல்லியிடம் 51 ரன்னில் தோல்வி அடைந்து இருந்தது. 

டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. அதன்பிறகு புனே, பஞ்சாப்பை வீழ்த்தியது. அடுத்து 4 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது.

இரு அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் 10 ஆட்டத்திலும், டெல்லி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Trending News