ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்?

ஐபிஎல் 12 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 04:41 PM IST
ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்? title=

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் மும்பை அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

மும்பை இந்தியன்ஸ் அணி: 

மும்பை இந்தியன்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 18 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. பேரிண்டர்ஸ் சிங் சரன், 
2. லசித் மலிங்கா
3. யுவராஜ் சிங்
4. அன்மோல் பிரீத் சிங்
5. பங்கஜ் ஜெய்ஸ்வால்
6. ரஸிக் டார்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரோஹித் சர்மா, பும்ரா, ஹார்திக் பாண்டியா, குணால் பாண்டியா, இஷான் கிஷான், ஆதித்யா தாரே, அனுகுல் ராய், சூர்யகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹார், கியோன் பொல்லார்ட், மிட்செல் மெக்லின்ஸ், எவின் லீவிஸ், பென் கட்டிங், ஜேசன் பெக்டார்ஃப், சித்தஷ் லாட், குவின்டொன் டி, ஏடம் மில்னே.

 

 

Trending News