ஐபிஎல் 2017, போட்டி 53: பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஐதராபாத் அணி

Last Updated : May 13, 2017, 07:35 PM IST
ஐபிஎல் 2017, போட்டி 53: பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஐதராபாத் அணி title=

இன்று மாலை 4 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது. குஜராத் லயன்ஸ் அணி தனது பேட்டிங்கை வெயின் ஸ்மித், இஷான் கிஷன் ஆகியோருடன் தொடங்கியது.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்துக் கொண்டிருந்தது. குஜராத் அணி 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

13-வது ஓவருக்கு பிறகு அந்த அணியின் விக்கெட்டுக்களை மளமளவென விழா ஆரம்பித்தது. இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

19.2 ஓவரில் 154 ரன்னில் குஜராத்தை ஆல்அவுட் ஆனது. ஐதராபாத் அணி சார்பில் மொகமது சிரஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஷிகர் தவண் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். ஷிகர் தவண் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மொயிசஸ் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் அவுட் ஆனார். 

பின்னர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் நிதானமாகவும், பின்னர் இருவரும் அதிரடியாகவும் விளையாடினார்கள். இருவரும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர். டேவிட் வார்னர் 52 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 69 ரன்கள் எடுத்தார். அதேபோல விஜய் சங்கர் 44 பந்துகளில் பவுண்டரி உட்பட 63 ரன்கள் எடுத்தார். 

ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் தனது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

 

 

Trending News