வீடியோ: சிவாஜி-யை மிஞ்சிய இர்பானின் சகோதர பாசம்!

Updated: Oct 12, 2017, 01:50 PM IST
வீடியோ: சிவாஜி-யை மிஞ்சிய இர்பானின் சகோதர பாசம்!
Screen Grab (Twitter)

இந்திய கிரிக்கெட் அணியில் சகோதர்கர்களாய் களமிரங்கி, ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் பதான் ப்ரதர்ஸ். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள் என அவரது தந்தையே அவர்களுக்கு சான்றிதழ் கெடுத்துள்ளார்.

இந்நிலையில் ராஞ்சி டிராபி போட்டியில் நடைப்பெற்ற சம்பவம் ஒன்று அவர்களது பாசத்தினை மீண்டும் நிறுப்த்துள்ளனர்.

சமீபத்தில் இந்தூரின் ஹால்கர் ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் யூசப் பதான் இரண்டு இன்னிங்சிலும் தனது சதத்தினைப் (111 மற்றும் 136 ரன்கள்) பூர்த்தி செய்தார். இதில் ஒரு இன்னிங்ஸில் பதான் தனது சதத்தினை பூர்த்தி செய்யும்போது அவருடன் களத்தில் இருந்த இர்பான் பதான், மகிழ்ச்சியில் தனது அண்ணனை ஓடிச் சென்று கட்டிப்பிடித்த காட்சி ரசிகர்களை நெகிழிச்சியில் ஆழ்த்தியுள்ளது!

இந்த சம்பவத்தின் வீடியோ பதிவினை இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!