டோனியை கலாய்த்த ஜெயவர்த்தன!!

Last Updated : Aug 8, 2017, 11:24 AM IST
டோனியை கலாய்த்த ஜெயவர்த்தன!! title=

உசைன் போல்ட் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

சமீபத்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் தூரத்தினை போல்ட் 9.95 நொடிகளில் கடந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். எனினும் அவர் மக்களின் மனதை வென்று பிரியா விடைபெற்றார்.

இதுகுறித்து ஸ்ரீலங்கா முன்நாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தன ட்விட்டரில் பாராட்டினார். இவரை தொடர்ந்து ஜெயவர்த்தன-வின் ரசிகர் ஒருவர் மறுபதிவிட்டது இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

 

 

இந்த ட்விட் -இல், ஜெயவர்த்தன "போல்ட்க்கு மரியாதைகள்" என் பதிவிட்டார். இதற்கு ஜெயவர்த்தன ரசிகர் ஒருவர், "டோனியையும் பாராட்டுங்கள் அவர் போல்ட்டை விட வேகமானவர்" என பதிவிட்டார். 

இதனை விளையாட்டாக கலாய்க்கும் வகையில் "டோனி பைக்கில் செல்கிறாரா?" என மறு பதிவிட்டுள்ளார். 

Trending News