டான் ப்ராட்மேன் சாதனையினை சமன் செய்தார் கோலி!

கிரிக்கெட் ஜாம்பவான் டான் ப்ராட்மேன் சாதனைகளில் ஒன்றினை இந்திய வீரர் கோலி சமன் செய்துள்ளார்.

Last Updated : Jan 16, 2018, 07:13 PM IST
டான் ப்ராட்மேன் சாதனையினை சமன் செய்தார் கோலி! title=

கிரிக்கெட் ஜாம்பவான் டான் ப்ராட்மேன் சாதனைகளில் ஒன்றினை இந்திய வீரர் கோலி சமன் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய, இரண்டாவது டெஸ்ட் போட்டியினை தற்போது விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி, ப்ராட்மேனின் சாதனையினை (அணித்தலைவராக இருந்து 8 முறை 150 ரன்கள் எடுத்தவர்) சமன் செய்துள்ளார்.

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் கோலி 153 குவித்துள்ளார், இந்த எண்ணிக்கையானது இவரின் அடுத்த சாதனைக்கு அடித்தளம் போட்டுள்ளது.

தற்போது இந்த சாதனைப் பட்டியலில் ப்ராட்மேன் மற்றும் கோலியினை அடுத்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க் உள்ளார்.

Trending News