46 ரன்கள் மட்டுமே தூரம்..!! சாதனை செய்வாரா தல தோனி!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடக்க வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை உள்ளது. இன்றைய போட்டியில் எம்.எஸ். தோனி சாதனை செய்வாரா.

Updated: Feb 13, 2018, 10:25 AM IST
46 ரன்கள் மட்டுமே தூரம்..!! சாதனை செய்வாரா தல தோனி!!
Pic Courtesy : Twitter

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முன்னதாக, இத்தொடரில் நடைப்பெற்ற போட்டிகளில், மூன்று போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடைப்பெறவுள்ள போட்டியில் இந்தியா வென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டி தொடரை, அந்த அணியின் சொந்த மண்ணில் கைப்பற்றி வரலாறு படைக்கும்.

சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஷிகர் தவானும் நல்ல ஃபாரமில் இருப்பதால் தென்னாப்பிர்க்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்கள்.

மாற்றொரு புறத்தில் முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடக்க உள்ளார். அவர் இந்த சாதனை செய்ய 46 ரன்கள் மட்டுமே தூரம். இன்றைய போட்டியில் 10,000 ரன்களை கடந்தார் என்றால் சர்வதேச ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்களை கடக்கும் 12 வீரர் ஆவார். இந்தியாவில் நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னதாக சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் - செயிண்ட் ஜார்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானம்

நேரம் - பிப்.,10 _ 01:00 PM (உள்ளூர் நேரம்), 10 04.30 PM (இந்திய நேரம்)

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close