இந்தியா vs நியூசிலாந்து: நாளை முதல் ஒருநாள் போட்டி; யாருக்கு வெற்றி? ஒரு அலசல்

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி நாளை 23 ஆம் தேதி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2019, 04:52 PM IST
இந்தியா vs நியூசிலாந்து: நாளை முதல் ஒருநாள் போட்டி; யாருக்கு வெற்றி? ஒரு அலசல் title=

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக்க 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி, இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கடைசியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 70 ஆண்டுகாலமாக இருந்த கரும்புள்ளியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இந்தநிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய அணி, தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்திற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டியிலும் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவை வென்றது போல நியூசிலாந்தை வெல்வது அவ்வளவு எளிதல்ல.

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி நாளை 23 ஆம் தேதி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணியை பொருத்த வரை, அவர்கள் நாட்டில் அவர்கள தான் கிங். அங்கு இருக்கும் மைதானங்கள் மற்ற அணி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கு. காற்று மிக வேகமாக வீசும். இதுபோன்ற சிரமங்களை மீறி, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் சாதனை செய்துள்ள இந்திய அணி மனபலத்துடன் இருக்கிறார்கள். எனவே நியூசிலாந்து தொடரிலும் விராட் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாதனை செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதேபோல நியூசிலாந்து அணியும் தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. மேலும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முழுபலத்துடன் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

எனவே நாளைய போட்டி விறுவிறுப்புக்கு குறை இருக்காது. முதல் ஒருநாள் போட்டி நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். 

Trending News