முத்தரப்பு T20: விஸ்வரூபம் எடுத்த வங்கதேசம், பலியான இலங்கை!

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின!

Updated: Mar 11, 2018, 12:43 PM IST
முத்தரப்பு T20: விஸ்வரூபம் எடுத்த வங்கதேசம், பலியான இலங்கை!
Pic Courtesy: twitter/@BCCI

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின!

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சினை தேர்வு செய்தத்து. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் பெராரா 74(48), மென்டீஸ் 57(30) ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய வங்கதேசம் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதனால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்து வெற்றி இலக்கினை எட்டியது.

வங்கதேச தரப்பில் ரஹிம் 72(35), இக்பால் 47(29), லிடோன் தாஸ் 43(19) ரன்கள் குவித்தனர். இந்நிலையில் வங்கதேசம் இத்தொடரின் தனது முதல் வெற்றியினை பதிவுசெய்துள்ளது. மூன்று அணிகளும் 1-1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து வரும் பிப்.,12 ஆம் நாள் தொடரின் 4-வது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.