பாரா ஒலிம்பிக் போட்டி: சாகினா காதூன் மோடிக்கு எழுதிய கடிதம்!!

ஆஸ்திரேலியாவின் காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

Updated: Feb 8, 2018, 01:05 PM IST
பாரா ஒலிம்பிக் போட்டி: சாகினா காதூன் மோடிக்கு எழுதிய கடிதம்!!
ANI

ஆஸ்திரேலியாவின் காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் சேர்க்கப்படவில்லை.  

இதுகுறித்து பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன்:- கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளுக்கு நான் காத்திருக்கிறேன். இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன்" நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் கடைசி வரை போராடுவேன், என்று வருத்தத்துடன் கூறினார்.

மேலும், அவர் ஆஸ்திரேலியாவின் காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.