Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா ஏழு பதக்கங்களை வென்றிருக்கிறது. ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு நாடெங்கிலும் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 09:02 PM IST
  • நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?
  • தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா 20 லட்சம் மதிப்புள்ள XUV700 காரை நீரஜ் சோப்ராவாக்கு பரிசளிக்கிறார்
  • சி.எஸ்.கே அணி ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கும்
Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே? title=

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா ஏழு பதக்கங்களை வென்றிருக்கிறது. ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு நாடெங்கிலும் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. 

இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த ஈட்டி எறிதல் வீரருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரசு உயர் அதிகாரி வேலை ஒரு புறம் என்றால், கோடிக்கணக்கான பரிசுகளும், வெகுமதிகளும் அறிவிக்கப்படுகின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடி ரூபாயை நீரஜ் சோப்ராவுக்கு வழங்குகிறது. பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

Also Read | Tokyo Olympics: ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை பொழியும் BCCI 

பிரபல ஆட்டோ தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ரூ. 20 லட்சம் மதிப்புள்ள XUV700 காரை நீரஜ் சோப்ராவாக்கு பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற பொருட்கள் மற்றும் பணச் சலுகைகள் ஒருபுறம் என்றால் அவருக்கு வாழ்நாள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆனந்த் மஹிந்திரா.

அவர் தனது டிவிட்டர மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு ஒரு கோரிகையை வைத்துள்ளார்.

நீரஜ் சோப்ராவின் நினைவாக ஒரு நாணயத்தை வெளியிடலாமே என்று அவர் பரிந்துரைத்துள்ளார். 1991 ஒலிம்பிக் நாணயத்தில் பொறிக்கப்பட்ட ஈட்டி எறிதல் சின்னத்துடன் உள்ள நாணயத்தை ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டிரில் பகிர்ந்துக் கொண்டார். 'நினைவு நாணயங்களில் ஈட்டி எறிதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீரஜ் சோப்ராவை சித்தரிக்கும் நாணயத்தை அதிகாரப்பூர்வமாக இந்திய வெளியிட வேண்டும். 

நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் தங்க மகனின் பெயர் வரலாற்றின் விளையாட்டு அத்தியாயத்தில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நீரஜ் சோப்ராவுக்கு, ஹரியானா அரசு ரூ .6 கோடி, பஞ்சாப் அரசு ரூ .2 கோடி, பிபிசிஐ ரூ .1 கோடி உட்பட நீரஜ் சோப்ராவுக்கு ரொக்க விருதுகள், பதவிகள் மற்றும் இலவச விமானப் பயணம் வழங்கப்படுகிறது. 

ஒலிம்பிக் நாயகன், நாணயத்தில் இடம் பெறுவாரா? அல்லது வெறும் நாணய பரிசுக்கு மட்டுமே தகுதி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனந்த் மஹிந்திராவின் ஆலோசனையை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News