FIFA ​உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு

FIFA Price Money: ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு கிடைக்கவிருக்கும் பரிசுத்தொகை வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2022, 10:28 PM IST
  • ​உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை
  • பரிசுத்தொகையை அதிரடியாக அதிகரித்தது ஃபீபா
  • மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகையும் அதிகரித்தது
FIFA ​உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு title=

ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணி பெறப்போகும் மொத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? ஃபீபா கால்பந்து உலக கோப்பை தொடர் என்பது சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டு போட்டி ஆகும். கால்பந்து ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவை ஃபீபா எனப்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கத்தாரில் வருகிற 20ம் தேதி தொடங்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், பரிசு தொகை 440 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3586 கோடி என்பது அனைவரையும் திகைக்க வைக்கிறது. 

கத்தாரில் நடைபெறவிருக்கும் 22வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் அனைத்தும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும்.  

மேலும் படிக்க | ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கால்பந்து போட்டி!

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொத்த பரிசு தொகை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3258 கோடியாகும். தற்போது அத்துடன் 40 மில்லியன் டாலர் தொகை அதிகரித்துள்ளது.

2022 ஃபீபா கால்பந்து உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு  இந்திய மதிப்பில் 344 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு  இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 220 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.

மேலும் படிக்க | கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்து விழுந்த வீடியோ வைரல்

உலகக் கோப்பபி போட்டியில் நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும். அதேபோல் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் இந்திய மதிப்பில் தலா 138 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும். இரண்டாவது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடி பரிசு கிடைக்குக்ம். லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஃபீபா அறிவித்துள்ளது.

அதேபோல, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு 60 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என்று ஃபீபா அறிவித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடருடன் ஒப்பீடும்பொது இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News