Youth Olympics: பளுதூக்குதல் வீரர் ஜெர்மி தங்கம் வென்றார்!

அர்ஜெண்டினாவின் பூனாஸ் ஏர்ஸில், மூன்றாவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 62 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் 15 வயதான ஜெர்மி லாரினுகா பங்கேற்றார். 

Last Updated : Oct 9, 2018, 10:16 AM IST
Youth Olympics: பளுதூக்குதல் வீரர் ஜெர்மி தங்கம் வென்றார்! title=

அர்ஜெண்டினாவின் பூனாஸ் ஏர்ஸில், மூன்றாவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 62 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் 15 வயதான ஜெர்மி லாரினுகா பங்கேற்றார். 

ஆர்ஜென்டீனாவின் பியூனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக் (இளையோர்) போட்டிகள் சனிக்கிழமை நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யூத் ஒலிம்பிக் முதல் போட்டி சிங்கப்பூரில் 2010-ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது ஒலிம்பிக் போட்டி சீனாவின் நான்ஜிங்கில் 2014-ம் ஆண்டில் நடைபெற்றது. தற்போது மூன்றாவது போட்டிகள் ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

இந்நிலையில் இதன் ஆண்களுக்கான 62 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் 15 வயதான ஜெர்மி லாரினுகா பங்கேற்றார். உலக யூத் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜெர்மி, இதில் மொத்தமாக 274 கி.கி., (124 + 150 கி.கி.,) தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். துருக்கியின் டாப்டஸ் கானெர் வெள்ளிப்பதக்கம் வென்றார். கொலம்பியாவின் வில்லர் எஸ்டிவின் ஜோஸ் வெண்கலம் வென்றார். 

Trending News