கடைசி போட்டியை வெல்லுமா இலங்கை?

Updated: Aug 11, 2017, 11:55 AM IST
கடைசி போட்டியை வெல்லுமா இலங்கை?

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அணியில் சிறு மாற்றங்களுடன் களம் இறங்குகிறது இலங்கை. இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை துவங்க உள்ளது.

முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டியையும் வென்று இந்திய தொடரை வென்றுள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் இலங்கை தனது ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது.

இதன் ஒரு முயச்ற்சியாக தனது அணியில் சிறு மாற்றங்களை செய்துள்ளது இலங்கை அணி.

அதன்படி ரங்கனா ஹேரத் மற்றும் பிரதீப் க்கு பதிலாக வேறு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை அணியின் வீரர் பட்டியல்:-

தினேஷ் சந்திமல் (c), உபுல் தராங்க, டிமுந்த் கருணரத்னே, குசல் மென்டிஸ், அங்கேலோ மதேவ்ஸ், லஹிறு திரிமன்னே, தனஞ்சய் டி சில்வா, நிரோஷன் டிக்க்வேள்ள (wk), தில்ருவான் பெரேரா, லஹிறு குமார, விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, லஹிறு கமகே, லக்ஷன் சண்டகன், மலிந்த புஸ்பகுமாரா.