ஊக்க மருந்து சர்சையில், யூசப் பதான் இடைநீக்கம்!

ஊக்க மருந்து சர்சையில் சிக்கிய யூசப் பதான், 5 மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது!

Updated: Jan 9, 2018, 03:14 PM IST
ஊக்க மருந்து சர்சையில், யூசப் பதான் இடைநீக்கம்!
File Photo

புதுடெல்லி: ஊக்க மருந்து சர்சையில் சிக்கிய யூசப் பதான், 5 மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது!

ஊக்க மருந்து உபயோகித்ததாக சர்சையில் சிக்கிய, இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் 5 மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியின் போது வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் யூசப் பதான் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக முடிவுகள் தெரியபடுத்தியது.

இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட 18 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.

இந்த சர்சைத் தொடர்பாக யூசப் பதான் விளக்கம் அளிக்கையில், உடல்நல குறைவால் அவர் எடுத்துக்கொண்ட சிரப்பில் தான் பிசிசிஐ-யால் தடைசெய்யப்பட்ட டெர்புடலைன் என்னும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த வேதிப்பொருள் ஆனது அனைத்து இருமல் மருந்துகளிம் கலந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது விளக்கத்ததினை ஏற்றுக்கொண்ட பின்னர், இவரது தடைக்காலம் 15 ஆகஸ்ட், 2017 துவங்கி வரும் ஜன., 14, 2018 வரை எனும் 5 மாத காலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close