TTV கட்சி கொடி தடை தொடர்பான மனு மீது அடுத்த வாரம் விசாரணை!

ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரிய மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது! 

Last Updated : Mar 21, 2018, 11:37 AM IST
TTV கட்சி கொடி தடை தொடர்பான மனு மீது அடுத்த வாரம் விசாரணை! title=

ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரிய மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அடுத்து வரும் தேர்தல்களில் தனக்கு நிரந்தரமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும், தான் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவினை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தினகரன் பரிந்துரைத்த ஏதேனும் ஒரு பெயரை தேர்தல் ஆணையம் அவருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. 

இதனையடுத்து மார்ச்,15-ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிவித்தார். பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, கட்சிக்கு "அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்" என அறிவித்தார். மேலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களுடன் மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படம் அமைந்த வடிவில் கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரி அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

தினகரன் அறிமுகப்படுய கொடி, அதிமுக-வின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரே மாதிரி கொடி இருப்பதால், அது தொண்டர்களை குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Trending News