ஆளுநர் மாளிகை முற்றுக்கை: விஜயகாந்த், பிரேமலதா கைது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2018, 03:35 PM IST
ஆளுநர் மாளிகை முற்றுக்கை: விஜயகாந்த், பிரேமலதா கைது title=

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேறு மாநிலத்தவரை சேர்ந்தவரை நியமிப்பதா எனக்கூறி, அவரை திரும்பப்பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

ஆனால், ஆளுநர் இதுவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவை நியமனத்தை திரும்ப பெற வில்லை. இதனால் விஜயகாந்த் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அங்கு பரபரபப்பு ஏற்பட்டது. பின்னர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். 

Trending News