85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

Updated: Jul 17, 2017, 04:17 PM IST
85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் 85% இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. 

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

மேலும் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார். 

இந்நிலையில் இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்தததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பீல் செய்துள்ளார். மத்திய பாடத்திட்டத்தில் சமனற்ற நிலையை களையவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தமிழக அரசின் அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5% இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.