6 வருடம் கழித்து தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு - முழு விவரம்

தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால், அதனை சமாளிக்க பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Jan 19, 2018, 09:03 PM IST
6 வருடம் கழித்து தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு - முழு விவரம் title=

தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால், அதனை சமாளிக்க பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது.  மேலும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் என இரண்டு போக்குவரத்துக் கழகமும் செயல்படுகின்றன. இந்த போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 22 ஆயிரத்துக்கு அதிகமான பேருந்துகள் உள்ளன.

நமது அண்டை மாநிலங்களை விட தமிழகத்தின் பேருந்து கட்டணம் குறைவு. கடந்த ஆறு ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப் படவில்லை. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் கடன் சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. போக்குவரத்து தொழிளார்களுக்கு போதிய ஓய்வு ஊதியத்தை அரசால் வழங்கமுடியவில்லை. 

இதனால் போக்குவரத்து ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்திய தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்திப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவதுல்: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 2001ம் ஆண்டு முதல் இரண்டு முறையே மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாக, 2011ல் உயர்த்தப்பட்டத. கடந்த ஆறு ஆண்டுகளாக பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பணியாளர்களக்கு வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களை முன்னிட்டு பஸ் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க மடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக பேருந்து கட்டணம் உயர்வு:-

புறநகர் சாதாரண பஸ் கட்டணம் ரூ.5 to ரூ.6 

விரைவு பஸ் கட்டணம் ரூ.17 to ரூ 24 

அதிநவீன பஸ் கட்டணம் குறைந்த பட்ச கட்டணம் ரூ.21 to ரூ.30 

அதி நவீன சொகுசு பஸ் கட்டணம் ரூ.21 to ரூ.33 

வால்வோ பஸ் கட்டணம் ரூ.33 to ரூ.51 

பைபாஸ் ரைடர் பஸ் கட்டணம்(புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18 to ரூ.27 

மாநகர பஸ் அதிகபட்ச கட்டணம் ரூ.12 to ரூ.19 

ஏ.சி பஸ் கட்டணம் குறைந்த பஸ் கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150

 

Trending News