ஓபிஎஸ் அணியுடன் பேச 7 பேர் கொண்ட குழு அமைப்பு

Last Updated: Friday, April 21, 2017 - 14:17
ஓபிஎஸ் அணியுடன் பேச 7 பேர் கொண்ட குழு அமைப்பு
Zee Media Bureau

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடந்ததது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த  ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், வீரமணி, தங்கமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

comments powered by Disqus