துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

Last Updated : Aug 21, 2017, 05:23 PM IST
துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். title=

ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார் மற்றும் மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.

 

ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு எம்ஜிஆர் நினைவிடத்திற்கும் சென்று இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

அதிமுக இணைப்பிற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ், ஓபிஎஸ் முன்னால் முதலைமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

 

 

அதிமுக இணைப்பிற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ், ஓபிஎஸ் முன்னால் முதலைமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் வந்துள்ளனர்.

 

 

இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் முன்னால் முதலைமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர்.

அதிமுக இணைப்பிற்கு எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அதிமுக-வில் இருந்து சசிகலாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என தமிழக ம் முதல்வர் பேட்டி. அதிமுக வழி காட்டுதல் குழுவில் 11பேர் நியமனம்

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். பிறகு செய்தியாளர்களிடம் தமிழக முதலமைசர் பேசினார். அப்பொழுது பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி என கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாம்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் தரையை தொட்டு வணங்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணி இணைகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மீண்டும் வந்தார்.

அனைத்து நிபந்தனைகளும் ஏற்க்கப்பட்டன, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றுக்கொண்டு இருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்- அமைச்சர் செம்மலை.

 

 

தமிழக முதல்வர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மீண்டும் வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

 

 

பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை வந்தார்.

அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் இணைகின்றன

சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு பின்னர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வருகை.

 

 

ஓபிஎஸ், முதல்வர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் மலர்களால் அலங்கரிப்பு.

மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார்

அதிமுக இரு அணிகளும் இன்று நண்பகல் 12 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் இணைக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. 

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையலாம் என தகவல்கள் வெளியாகியது. தகவல்கள் வெளியாகிய நிலையில் 
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று தலைமையகத்தில் நடைபெறுகிறது. 

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. பிரிந்த கட்சி இணையுமா என்று அதிமுக தொண்டர்களும் 6 மாதங்களாக தவித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை நேற்று முன்தினம் ஏற்பட்டது.

முதல் அமைச்சர் வீட்டில் அவருடன் அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவருடன் அவரது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினர்.

இவ்வாறு இரு அணிகளும் ஆலோசனை நடத்திய நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அதிமுக தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இன்று நண்பகல் 12 மணிக்கு இணைக்கப்படுகின்றன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நண்பகல் 12 மணியளவில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகம் வரவிருக்கிறார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், இருவரும் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டாக அறிவிக்க உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனவும், அவரது அணியில் உள்ள 2 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அதிமுக நிர்வாகிகள் ஒன்று கூடி சசிகலாவை அதிமுக பொதுச்செயலர் பதவியிலிருந்து நீக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

Trending News