அதிமுகவிலிருந்து சசிகலாவை மதுசூதனன் நீக்கினார்

Last Updated: Friday, February 17, 2017 - 12:44
அதிமுகவிலிருந்து சசிகலாவை மதுசூதனன் நீக்கினார்
Pic courtsey: @E.Madhusudhanan

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் நீக்கயதாக இன்று அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன் அறிவித்தார். 

அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் மதுசூதனனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலர் சசிகலா அறிவித்திருந்தார். இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் நீக்கப்படுகிறார்.

வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

comments powered by Disqus