கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது!

கோவை அம்மன்குளம் பகுதியில் ராதா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, இளங்கோவன் என்ற 59 வயது நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2022, 12:48 PM IST
  • கோவை ஆசிட் வீச்சு சம்பவம் விவகாரம்
  • 59 வயது முதியவர் கைது!
  • மகளின் வாழ்க்கையை கெடுத்ததான சந்தேகத்தில் ஆசிட் வீசிய அப்பா
கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது! title=

கோவை: கோவை அம்மன்குளம் பகுதியில் ராதா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, இளங்கோவன் என்ற 59 வயது நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராதாவின் கணவர் ஸ்டாலினின் நண்பர் சந்திரசேகரனின் மாமனாரான 59 வயதான இளங்கோவன், இந்த துணிகர சம்பவத்தை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கணவர் ஸ்டாலினை பிரிந்த ராதா, கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகிறார். 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.மளிகைக் கடையில் இருந்து வந்துக் கொண்டிருந்தபோது இளங்கோவன் ஆசிட் (Acid Attack) வீசியதில் இடது பக்க முகம், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பந்தய சாலை காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் இளங்கோவன் கைது செய்யப்பட்டார்.

ALSO READ | பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்

ராதாவுடன்  சந்திரசேகர் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதாக சந்தேகப்பட்ட இளங்கோவன், ராதா தான், தனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக கருதி ஆசிட் (Acid Attack) வீசியிருக்கிறார். 

 இளங்கோவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ராதாவின் முகத்தில் ஆசிட் வீசியதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்தார். அந்த வாக்கு மூலத்தில்  தனது மகளின் கணவரான சந்திரசேகருக்கும், ராதாவுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிவித்தார்.

சந்திரசேகரன், தான் சம்பாதிக்கும் பணத்தை ராதாவிடம் கொடுத்து அங்கேயே இருப்பதால், தனது மகளின் வாழ்க்கை கெட்டுப்போனதாக நினைத்து ராதாவின் முகத்தில் ஆசிட் வீசியதாக தெரிவித்துள்ளார். 

இளங்கோவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News