பெய்ட்டி புயல் எதிரொலி; மெரினாவில் கடல் சீற்றம்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Dec 16, 2018, 09:47 AM IST
பெய்ட்டி புயல் எதிரொலி; மெரினாவில் கடல் சீற்றம்! title=

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து தமிழகம், ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா நோக்கி புயல் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புயலின் தாக்கம் மெரினாவில் கடல் சீற்றமாக தென்படுகிறது.

பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனவே ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த பெய்டி புயலானது ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது! 

Trending News