திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா

Last Updated: Thursday, September 14, 2017 - 14:12
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா
Pic Courtesy : Twitter

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:

மணி விழாவுக்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து  வருகிறேன். அந்த வகையில் மணி விழா அழைப்பிதழை கொடுக்கவே மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இதில் எந்தவித அரசியலும் இல்லை. அரசியலை பற்றி பேசவும் இல்லை. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரிடம் நலம் விசாரித்தேன் என்று கூறினார்.