தமிழக சட்டசபை: ஸ்டாலின், திமுக எம்எல்ஏ வெளியேற்றம்- மறியல்- கைது!!

Last Updated : Jun 14, 2017, 02:14 PM IST
தமிழக சட்டசபை: ஸ்டாலின், திமுக எம்எல்ஏ வெளியேற்றம்- மறியல்- கைது!! title=

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, கூவத்தூர் பேரம் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். 

ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், தீர்மானத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகர் தனபால் மறுத்தார். இதனால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். 

மேலும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சபையை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார். 

பின்னர் சபாநாயகர் உத்தரவின் பேரில் அவை காவலர்களால் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார். சபாநாயகர் பெயர் வாசிக்க, வாசிக்க துறைமுருகன் உள்ளிட்ட மற்ற திமுக எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

 

 

திமுக.,வினர் வெளியறே்றப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

Trending News