காவிரி விவகாரம்: 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Last Updated : Feb 22, 2018, 06:06 PM IST
காவிரி விவகாரம்: 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்!  title=

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானங்கள்: 

1. பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும்.

2. 177.25 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம்.
3. அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை விரைவில் சந்திப்பது உள்ளிட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16-ந் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இந்த் கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த் கூட்டத்தில்,177.25 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் உள்ளிட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவேரி நதிநீர் பிரச்சனை குறித்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை. 

இதை தொடர்ந்து, தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News