காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம்

Last Updated : Sep 19, 2017, 02:23 PM IST
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் title=

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடாளுமன்ற முடிவுக்கு உட்பட்டதே என்று மத்திய அரசு கூறியது. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்

நடுவர் மன்றம் எடுக்கும் முடிவில் மாற்றங்கள் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பார்லிமென்டில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு வாதிட்டது. 

பிறகு காவிரி நதி நீர் பங்கீடு குறித்து மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending News