அரசியல் கட்சி தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொள்வதா என அரசியல் கட்சி தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது!

Updated: Jun 12, 2018, 08:17 PM IST
அரசியல் கட்சி தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொள்வதா என அரசியல் கட்சி தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது!

மருத்துவப் படிப்பிற்கு இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தோல்வி காரணமாக மனஉலைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... நீட் தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாத காரணத்தால் தான் இந்தாண்டும் மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அவர்கள் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இதனை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் தற்கொலைக்கு  அரசு மட்டுமே காரணம் அல்ல. நீட் தேர்வில்  மாணவர்கள் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை கூறுவது சரியாக இருக்காது.  நீட் தேர்வுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.