வடகிழக்கு பருவமழை துவக்கம்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது! 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Oct 11, 2018, 03:04 PM IST
வடகிழக்கு பருவமழை துவக்கம்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!
ZeeNewsTamil

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது! 

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடலோர மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close