பாலியல் புகாரில் சிக்கிய சென்னை சாமியார்-க்கு காவல்துறை வலைவீச்சு!

பாலியல் வழக்கில் சிக்கிய சென்னை சாமியார் வெங்கடாசாரியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 9, 2018, 03:03 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை சாமியார்-க்கு காவல்துறை வலைவீச்சு!

பாலியல் வழக்கில் சிக்கிய சென்னை சாமியார் வெங்கடாசாரியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்!

ஸ்ரீ ராமானுஜ மிஷன் பொது தொண்டு நிறுவத்தின் தாளாளர் வெங்கடாசரவணன் என்னும் வெங்கடாசாரியார் சதுர்வேதி, கடந்த 2004-ஆம் ஆண்டு இருபெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக சீண்டினார் என குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் இவர் தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர குற்றவியல் காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் மகளை வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமியார் கடத்தி சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் ரீதியாக துண்புறுத்தியதாக சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது வீட்டின் கீழ் தளத்தினை வெங்கடாசாரியார் சதுர்வேதி ஆக்ரமித்துள்ளதாவும், தன்னிடம் இருந்து சுமார் 15 லட்சம் வரையில் மிரட்டி பிடுங்கியுள்ளதாகவும் இந்த புகாரில் சுரேஷ் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சதுர்வேதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் சதுர்வேதி கைது செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வெங்கடாசாரியார் சதுர்வேதி விடுதலை செய்யப்பட்டார்.  

இதைத்தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார்  மீண்டும் கைது செய்யப்பட்டார். சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார்  தற்போது தலைமறைவாகி உள்ளார். பல ஆன்மிக சொற்பொழிவுகளை மேற்கொண்டுள்ள வெங்கடாசாரியார் சதுர்வேதி அடிக்கடி வடநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சதுர்வேதி நேபாளம் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.