சென்னையில் இளம்பெண் எரித்துக் கொலை!

சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ANI | Updated: Nov 14, 2017, 11:59 AM IST
சென்னையில் இளம்பெண் எரித்துக் கொலை!
File photo

சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளிக் கால நண்பர் ஆகாஷ் இவரின் மீது ஒருதலையாக காதல் கொண்டுள்ளார். தன்னை காதல் செய்யுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

ஆனால் இந்துஜா ஆகாஷின் காதலை ஏற்கவில்லை, அதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், இந்துஜா மீதும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், முதற்கட்ட விசாரணை முடிவில் திட்டமிட்டே இந்த கொலை நடந்ததுள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்பெண்னுக்கு தீ வைத்தவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.