பொங்கல் பரிசு ரூ.5000 கேட்ட உதயநிதி...இப்போது ரூ.1000 கொடுப்பது ஏன்?

எதிர்கட்சியாக இருந்தபோது 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என கேட்ட உதயநிதிஸ்டாலின், இப்போதைய திமுக ஆட்சியில் அந்த தொகையை வழங்க வலியுறுத்துவாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2022, 10:56 AM IST
  • தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு
  • அப்போது ரூ.5000 கேட்ட உதயநிதி ஸ்டாலின்
  • இப்போது வலியுறுத்துவாரா? என கேள்வி
பொங்கல் பரிசு ரூ.5000 கேட்ட உதயநிதி...இப்போது ரூ.1000 கொடுப்பது ஏன்? title=

பொங்கல் பரிசு

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

ரூ.5000 வழங்க வலியுறுத்தல்

கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தொகை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்தது. ஆனால், அப்போது திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், மக்களின் வாழ்வாரத்தைக் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் போதாது, 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

மேலும் படிக்க | எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம்

உதயநிதி மீது விமர்சனம்

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கேட்ட உதயநிதி ஸ்டாலின், இப்போது அந்த தொகையை வழங்க முதலமைச்சரிடம் வலியுறுத்துவாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள உடன்பிறப்புகள் கொரோனா காலம் என்பதால் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டிருந்தார், இப்போது நிலைமை சீராக இருப்பதால் வழக்கம்போல் கொடுக்கும் பரிசு தொகையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என பதிலடி கொடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ’ஆண்டவரால் அலறப்போது டெல்லி’ கமல் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News